ராமநாதபுரம் ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை கேள்வி..!!

மதுரை : ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. உத்தரவை நிறைவேற்றவில்லை என சுகாதாரத்துறை செயலாளர், ராமநாதபுரம் ஆட்சியர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என அதிகாரிகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. பழுதடைந்த சுகாதார நிலைய கட்டடத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சுகாதாரத்துறை செயலாளர், ராமநாதபுரம் ஆட்சியர் ஒரு வாரத்துக்குள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டது.

The post ராமநாதபுரம் ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை கேள்வி..!! appeared first on Dinakaran.

Related Stories: