ஈரோடு மனவளக்கலை மன்றத்தில் யோகா பயிற்சி வகுப்புகள்

 

ஈரோடு, ஜூலை 5: ஈரோடு, பெரியார் நகரில் இயங்கி வரும் மனவளக்கலை மன்றம் அறிவுத்திருக்கோயிலில் புதிய யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. நாளை மறுதினம் 7ம் தேதி (திங்கட்கிழமை) துவங்கி 21ம் தேதி வரை காலை 7 மணி முதல் 8:30 மணி வரை ஒரு பயிற்சி வகுப்பும், இதே தேதியில் பெண்களுக்கு காலை 10:30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை ஒரு பயிற்சி வகுப்பும், மேலும், வருகிற 14ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை மாலை 7 மணி முதல் 8:30 மணி வரை மற்றொரு பயிற்சி வகுப்பும் துவங்கப்பட உள்ளன.
இந்த வகுப்புகளில் எளியமுறை தியானப்பயிற்சிகள், உடற்பயிற்சிகள், யோகா, காயகல்பப்பயிற்சிகள் மற்றும் சூரிய நமஸ்காரம் ஆகிய அடிப்படை பயிற்சிகள் கற்றுத்தரப்பட உள்ளது. 14 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

The post ஈரோடு மனவளக்கலை மன்றத்தில் யோகா பயிற்சி வகுப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: