இதில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் பொன்னேரி தலைமை மருத்துவர் கல்பனா கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் வார்டுகள் அவர்களுக்கு உணவு தயாரிக்கப்படும் உணவுக்கூடம் ஆகியவற்றை கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் பிரதாப் தமிழகத்திலேயே பொன்னேரி அரசு மருத்துவமனையில் 100வது ரத்த வங்கி திறக்கப்பட்டுள்ளது. இதனால் ரத்தம் சேமிப்பது மட்டுமின்றி ரத்தம் கொடுத்து மற்ற பகுதிகளுக்கும் எடுத்து செல்ல வசதியாக இருக்கும். அனைத்து அரசு மருத்துமனைகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். பொன்னேரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். நாய்கடி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் பொன்னேரி தாசில்தார் சிவக்குமார் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி குணசேகர் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் பொன்னேரி காவல்துறை உதவி ஆணையர் சங்கர் மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் மருத்துவர்கள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
The post பொன்னேரி அரசு மருத்துவமனையில் 100வது ரத்த வங்கி: கலெக்டர் எம்எல்ஏ திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.
