பாஜவில் யாருக்கு செல்வாக்கு என்பதில் நயினார், அண்ணாமலை, தமிழிசை இடையே கடும் போட்டி நிலவுகிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திருமங்கலம் நேருநகர், கொளத்தூர் தொகுதியில் உள்ள 64, 64அ மற்றும் 69வது வட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வீடுவீடாக சென்று பரப்புரை மேற்கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழிசை சவுந்தரராஜன் கவிதையில் மக்கள் ஏமாறாமல் உள்ளனர். அதனால்தான் அவர் நின்ற தேர்தலில் மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக அளித்துள்ளனர். நான் தமிழிசைக்கு புதிய கவிதையை உரிதாக்கினேன். தோல்வியின் முகமே தமிழிசையே எங்கள் அக்காவே.. வருக என கூறினேன். அவரை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

ஏதாவது தக்க வைப்பதற்காக அவர் அப்படி பேசி வருகிறார். ஏற்கனவே நாற்காலி போட்டி கடுமையாக உள்ளது. பாஜவில் யாருக்கு செல்வாக்கு என்பதை காட்டுவதற்காகதான் தமிழிசை, அண்ணாமலை, நயினார் இடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதனால்தான் செல்வாக்கு பெற்ற தலைவர் என காட்டிக்கொள்வதற்காக தமிழிசை பேசி வருகிறார். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வாயில் வருவதை எல்லாம் பேசிகொண்டும் உளறிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு கூறினார்.

The post பாஜவில் யாருக்கு செல்வாக்கு என்பதில் நயினார், அண்ணாமலை, தமிழிசை இடையே கடும் போட்டி நிலவுகிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: