இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை கூட்டம்

புழல்: செங்குன்றம் அடுத்த புள்ளி லைன் தனியார் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது மாவட்ட மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் என்.எஸ்.பிரதாப் சந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் வி.சரவணன் சிறப்புரையாற்றினார் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி.வி.செந்தில் மாவட்ட நிர்வாகிகள் ஜி.பாலன் என்.ஜீவா வி.இராஜீவ்காந்தி கே.போஸ் ஆர்.சீனிவாசன் கே.குமரேசன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் செங்குன்றத்தில் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் தொழில்பேட்டை உருவாக்க வேண்டும் செங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிரா ம மக்கள் பயன்பெறும் வகையில் 100 படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் மெட்ரோ ரயில் திட்டத்தை மாதவரத்தில் இருந்து விரிவுபடுத்தி செங்குன்றம் சோழவரம் வழியாக ஜனப்பசத்திரம் கூட்டு சாலை வரை நீடிக்க வேண்டும். வரும் 20ம் தேதி செங்குன்றத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஏராளமானோர் கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: