×

லாலாபேட்டை கடைவீதி மகா மாரியம்மன் கோயிலில் தூக்கு தேர் திருவிழா

 

கிருஷ்ணராயபுரம், ஜூலை 3: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை கடைவீதி மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை தூக்கு தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 29ம்தேதி காப்பு கட்டப்பட்டு கரகம் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி யோடு தொடங்கியது. 30ம்தேதி காலை, இரவு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
1ம்தேதி அபிஷேகம் மற்றும் ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். நேற்று 2ம்தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள், இளைஞர்கள் தோளில் தங்கள் தூக்கி கொண்டு முக்கிய வீதியின் வழியாக வலம் வந்தனர். தொடர்ந்து இன்று 3ம்தேதி முதல் 6ம்தேதி வரை உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 7ம்தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் கரகம் மஞ்சள் நீராடுதலுடன் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை தேவஸ்தானம் ஊர்பொதுமக்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

The post லாலாபேட்டை கடைவீதி மகா மாரியம்மன் கோயிலில் தூக்கு தேர் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Luku Thar Festival ,Maha Mariamman Temple ,Lalapettai Khaivedi ,Krishnarayapuram ,Lalapete Shop Maha Mariamman Temple Festival ,Lalapete Shop ,Karur District, Krishnarayapuram ,Medeti Kapu ,Karagam ,Thule Thar Festival ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...