தாய்லாந்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாஜி பிரதமர் ஷினவத்ரா அமைச்சராக பதவியேற்பு

பாங்காக்: தாய்லாந்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் பெண் பிரதமர் ஷினவத்ரா கலாசார துறை அமைச்சராக நேற்று பதவியேற்றார். தாய்லாந்து பிரதமராக இருந்த ஷினவத்ராவை அரசியலமைப்பு நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. ஷினவத்ரா பதவி இழந்ததை தொடர்ந்து இடைக்கால பிரதமராக சூர்யா ஜங்ருங் ரியாங்கிட்டை பிரதமராக நியமித்து மன்னர் மஹா வஜ்ரிலாங்கோர்ன் உத்தரவிட்டார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
இதில் முன்னாள் பிரதமர் ஷினவத்ரா கலாசார துறை அமைச்சராக பதவியேற்றார். பிரதமர் சூர்யா ஜங்ருங் ரியாங்கிட் பிரதமர் பொறுப்பை துணை பிரதமராக உள்ள பும்தாம் வெச்சாயா சாய் என்பவரிடம் விரைவில் ஒப்படைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பும்தாம் வெச்சாயாவும் தற்காலிகமாக பிரதமர் பதவியில் இருப்பார் என கூறப்படுகிறது.

The post தாய்லாந்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாஜி பிரதமர் ஷினவத்ரா அமைச்சராக பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: