×

ஆதார் உள்பட சான்றிதழ் பெற பழங்குடியின மக்களுக்கு 30ம் தேதி சிறப்பு முகாம்

 

கருர், ஜூன் 27: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கான ஆதார் உள்பட சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 30ம் தேதி நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் மேம்பாடு அடைவதற்காக பிஎம் ஜன்மான் மற்றும் டிஏ ஜேஜியூஏ ஆகிய திட்டங்களின் கீழ் பழங்குடியின மக்களுக்கு ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ்,

சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்காக ஜூன் 30ம் தேதி கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் தாசில்தார் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் இ சேவை, ஆதார் மையங்கள் வாயிலாக சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால் அந்த முகாமினை கரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆதார் உள்பட சான்றிதழ் பெற பழங்குடியின மக்களுக்கு 30ம் தேதி சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Karur ,District Collector ,Thangavel ,Karur District Collector Thangavel… ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...