×

தனியார் கம்பெனி ஊழியர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் கைது

 

 

பாணாவரம், ஜூன் 27: பாணாவரம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.பாணாவரம் அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(48). சோளிங்கரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு வெண்ணிலா(42) என்ற மனைவியும், சந்துரு, சுசீந்திரா என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பாலகிருஷ்ணன் கடந்த 21ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு வந்தார். காட்டுமூலை ரோட்டில் வந்தபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்து சராமரியாக வெட்டிக்கொன்றது.

இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்பி விவேகானந்தசுக்லா உத்தரவின்பேரில் அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர்சித்திக் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோளிங்கர்- வாலாஜா சாலை பாறைமேடு பகுதியில் வசிக்கும் முருகேசன்(44), வாலாஜா அருகே உள்ள ராமாபுரம் மோகன்(53) என்பவரை ஆகியோரை கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வந்தனர்.

The post தனியார் கம்பெனி ஊழியர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Panchayat President ,Panavaram ,Panchayat ,President ,Balakrishnan ,Anna Nagar ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...