×

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

கரூர், ஜூன். 26: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் புனித மரியன்னை அரசு உதவி பெறம் தொடக்கப்பள்ளியில் 2025-26ம் கல்வியாண்டுக்கான முதல் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மற்றும் பள்ளி தாளாளர் அறிமுக கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக 5ம் வகுப்பு ஆசிரியை மரியவில்லி புஷ்பம் வரவேற்றார்.

பள்ளி தலைமையாசிரியர் பெஞ்சமின் சகாயராஜ் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஜோசப் டேவிட் சிறப்புரையாற்றினார். இதில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், 12வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர். 4ம் வகுப்பு ஆசிரியை ஜாய்ஸ்மரிய திவ்யா தனது சொந்த செலவில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்பளிப்பாக அளித்த சீருடைகளை பள்ளி தாளாளர் வழங்கினார். 3ம் வகுப்பு ஆசிரியை ஆல்வின் ஜேம்ஸ் முத்து நன்றி கூறினார்.

The post பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மாணவர்களுக்கு சீருடை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Parent Teacher Association ,Karur ,Pasupathipalayam ,St. Mariannai Government Aided Primary School ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...