டெல்லி : 2026 ஜன.1 முதல் இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட்டுகள் வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய தர நிர்ணயத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 ஹெல்மெட் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜன.1 முதல் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பிரேக் சிஸ்டத்தை பொருத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ். அமைப்பை பொருத்துவதால் 35 முதல் 45 சதவீதம் வரை விபத்துகள் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
The post 2026 ஜன.1 முதல் இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட்டுகள் வழங்க ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.