திருமலை: ஆந்திர மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று முன்தினம் விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து திருப்பதியில் இருந்து நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினம் செல்ல ஆந்திர மாநில அரசு ஹெலிகாப்டரில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஏறினார். ஹெலிகாப்டரும் புறப்பட தயாராக இருந்த நிலையில், அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மத்திய அமைச்சரின் கிருஷ்ணப்பட்டினம் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக ஆந்திர அரசு உஷார்படுத்தப்பட்டு முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டரில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த முழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டிஜிபி ஹரிஷ்குமார் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
The post ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமானது ஒன்றிய அமைச்சர் செல்ல இருந்த ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு: அறிக்கை சமர்பிக்க டிஜிபி உத்தரவு appeared first on Dinakaran.