சென்னை: ஆயுதப்படை பிரிவில் 12வது பட்டாலியன் கமாண்டன்டாக இருப்பவர் அருண். இவர் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து, ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமுக்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதம், டிஜிபி சங்கர் ஜிவால் மூலம், உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து போலீஸ் துறையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான கடிதம் அவரிடம் வழங்கப்பட்டது. அவர் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர். 2013ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். 2024ல் எஸ்பியாக பதவி உயவு பெற்றார்.
The post போலீஸ் எஸ்பி திடீர் ராஜினாமா: தமிழக அரசு ஏற்பு appeared first on Dinakaran.