மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாக வெளியான தகவல் பொய்யானது: விமான நிலைய நிர்வாகம் தகவல்

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாக வெளியான தகவல் பொய்யானது என விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வருவது வழக்கம். அந்த வகையில், வழக்கம் போல் இன்றும் வந்துள்ளது. ஆனால் தரையிறங்கிய போது அந்த விமானத்தின் 4வது எஞ்சினில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக எஞ்சினில் கோளாறு இருப்பதை கண்டறிந்து பத்திரமாக விமானத்தை தரையிறக்கியகாகவும். பின்னர் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து . தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து தனியாக நிறுத்தி தீ விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரையில் சரக்கு விமானத்தில் ஓடுபாதைகளில் தீ விபத்து எஞ்சினில் ஏற்படவில்லை அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது. இத்தகைய நிகழ்விற்கு விமான நிலைய நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாக வெளியான தகவல் பொய்யானது; தீ பாதிப்பு எதுவும் இல்லை. அதிகாலை 4 மணிக்கு அந்த விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் உராய்ந்து அதிகப்படியான புகை எழும்பியது. சரக்கு விமானங்கள் தரையிறங்கும் போது இது வழக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: