வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 

வலங்கைமான், ஜூன் 14: வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மாணவிகள் பங்கு பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமா தலைமை ஏற்று துவக்கி வைத்துகூறுகையில்.கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் திருட்டு, கொள்ளை, அடிதடி, கொ லை, பாலியல் தொந்தரவுகளில் மட்டுமின்றி தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகை போதை பொருட்களால் அதை பயன்படுத்துவோர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.சமுதாயம், கலாசார சீரழிவுகளுக்கும் போதை பழக்கம் காரணமாகிறது. அரசின் வழிகாட்டுதல் படி போதை பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க மாணவ, மாணவிகள் முன் வர வேண்டும் என கூறினார்.

போதை விழிப்புணர்வு மன்றத்தின் பொறுப்பாளர் அஞ்சுகம் முன்னிலைவகித்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்பங்கு பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வலங்கைமான் கடைத்தெரு மற்றும் பாதிரிபுரம் பகுதிகளில் பேரணியாக சென்று போதைக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினார்கள்.போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பபடுத்தினர்.

The post வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: