மெடிக்கல்லில் ரூ.1.25 லட்சம் கையாடல்

மதுரை, ஜூலை 30: மதுரை எஸ்.எஸ்.காலனி சக்தி வேலம்மாள் முதல் தெருவில் பிரபல மருத்துவமனையின் மருந்துக்கடை உள்ளது. இங்கு கண்காணிப்பாளராக பரமக்குடி அருகே ஏந்தல் கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் (50) பணிபுரிந்து வந்தார்.  இவர் மருந்து கடையில் ரூ.50 ஆயிரம் சம்பள அட்வான்ஸ் வாங்கியுள்ளார். இதில் ஆயிரம் ரூபாயை மட்டும் திருப்பி செலுத்திய நிலையில் திடீரென தலைமறைவானார்.

இதையடுத்து, சந்தேகமடைந்து கடை கணக்குகளை சரிபார்த்தபோது, நந்தகுமார் 2 வாடிக்கையாளர்களிடம் ஜி.பே. மூலம் ரூ.85 ஆயிரம் பெற்றுக்கொண்டு மருந்து அனுப்பாமல் மோசடி செய்ததும் தெரியவந்தது. இது குறித்து மருந்துக்கடை நிர்வாகி மணிமாறன் அளித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தகுமாரை தேடி வருகின்றனர்.

The post மெடிக்கல்லில் ரூ.1.25 லட்சம் கையாடல் appeared first on Dinakaran.

Related Stories: