வடமதுரை, ஜூலை 30: வடமதுரை ரயில் நிலைய சாலை அகத்தியர் நகரை சேர்ந்தவர் சுகன்யா(26). இவரது கணவர் சுரேஷ்குமார்(27). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சுரேஷ்குமார் வடமதுரை உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுரேஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுரேஷ்குமார் நேற்று முன்தினம் சுகன்யாவிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு சுகன்யா மறுத்ததால் சுரேஷ்குமார் அவரை கடுமையாக அடித்து தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த சுகன்யா வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். மேலும் இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்குமார் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
The post மது குடிக்க பணம் கேட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது appeared first on Dinakaran.
