நன்றி குங்குமம் தோழி
நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
* நாவல் பழத்தின் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வரலாம். இது நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு நல்லது.
* நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்னைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
* ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்னை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
* வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
* நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
* சிறுநீரகக் கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்கள் கரைந்து போகும்.
* நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தரும்.
* அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடலாம்.
* தமனிகளில் ஏற்படும் பிரச்னைகளை குறைத்து, மாரடைப்பை தடுக்கும்.
தொகுப்பு: – எஸ்.ராஜம், ஸ்ரீ ரங்கம்.
The post நாவல் பழத்தின் நன்மைகள் appeared first on Dinakaran.