நன்றி குங்குமம் தோழி
*பித்தத்தை தணிக்க எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிடலாம்.
*பித்த நீர் மலத்துடன் வெளியேற ரோஜா பூ கஷாயம் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
*கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஈரல் வியாதி குணமாகும்.
*கண்கள் ஒளி பெற நேந்திர மூலி, அதிமதுரம் தூள் செய்து உட்கொண்டு வந்தால் ஒளி பெறும்.
*வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தடவ தீப்புண் குணமாகும்.
*கண் எரிச்சல் குணமாக அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிடலாம்.
*வயிற்றுக் கோளாறுகளுக்கு புதினா துவையல் நல்ல மருந்தாகும்.
*கண் நோய் குணமாக குங்குமப்பூவை தாய்ப்பாலில் குழைத்து கண் மீது பற்று இட குணமாகும்.
*கண்கள் குளிர்ச்சி பெற அரைக்கீரை வாரம் இரண்டு முறையில் உணவில் சேர்த்து வரலாம்.
*வெந்தயம் சிறுநீரக உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையுடையது.
*நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.
*கேழ்வரகு கூழ் செய்து பருகினால் பித்தம் தணியும்.
*இஞ்சியை மென்று தின்றால் தும்மல் சரியாகிவிடும்.
*குழந்தைகளுக்கு கண் சூடு தணிய நெல்லிக்காய் சாறு பிழிந்தெடுத்து உள்ளுக்கு கொடுத்து வர குணமாகும்.
தொகுப்பு- ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.
The post பாட்டி வைத்தியம்! appeared first on Dinakaran.
