*1996ம் ஆண்டு ஹரியானா அருகே நேரிட்ட விபத்தில் 349 பயணிகள் உயிரிழந்தனர். இதுவரையிலான விபத்துகளில் அதிகமான உயிரிழப்பை சந்தித்த வரலாற்று பதிவாக இருக்கிறது. சார்கி தாத்ரி அருகே நேரிட்ட இந்த விபத்தில் சவூதி அரேபிய ஏர் லைன்ஸ் மற்றும் கஜகஸ்தான் விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் இரு விமானங்களில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
*1978ம் ஆண்டில் ஏர் இந்தியா விமானமும் மும்பை அருகே கடலில் விழுந்தது. அதில் இருந்த 213 பயணிகளும் உயிரிழந்தனர். காக்பிட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.
*2010ல் அண்டை மாநிலமான கேரளாவின் மங்களூருவில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் குழந்தைகள் உட்பட 158 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். துபாயில் இருந்து மங்களூரு வந்த விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையில் விலகி விபத்துக்குள்ளானது. 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
*1988ல் இதே அகமதாபாத் விமான நிலையம் அருகே மும்பையில் இருந்து சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மரத்தில் மோதி சிக்கிய விபத்தில் 133 பேர் உயிரிழந்தனர். விமானியின் தவறால் ஏற்பட்ட இந்த விபத்து 2 பேர் மட்டும் உயிர் பிழைத்தனர்.
*1976ல் மும்பை அருகே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த 95 பயணிகளும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சின் இயங்காமல் தீப்பிடித்ததால் நேரிட்ட விபத்தில் அனைவரும் கருகி மாண்டனர்.
*1962ல் மும்பை அருகே மலையில் மோதியதில் அலிட்டாலியா விமானத்தில் இருந்த 94 பயணிகளும் இறந்து போனார்கள். சிட்னியில் இருந்து ரோம் சென்ற அந்த விமானம் மும்பையில் தரையிறங்க முயன்ற போது விபத்தில் சிக்கியதால் ஒரு பயணி கூட உயிர் பிழைக்கவில்லை.
*1990ல் மும்பை – பெங்களூரு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் விமானம் தரையிறங்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் 92 பேர் உயிரிழந்தனர். 146 பயணிகள் அதில் பயணித்தனர். விமானியின் தவறே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று 40 முதல் 50 வரையிலான பயணிகளை காவு வாங்கிய 2 விமான விபத்துகள் உட்பட இந்தியாவில் இதுவரை 40 விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
The post இந்தியாவில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட விமான விபத்துகள்: அதிகபட்சமாக 1996-ல் நேரிட்ட விபத்தில் 349 பயணிகள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.