திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் வரை ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று வழக்கம்போல் லூப் லைன் வழியாக ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பதி ரயில் நிலைய பிளாட்பாரத்திற்கு செல்ல சிக்னலுக்காக காத்திருந்தது. அப்போது திடீரென 2 பெட்டிகளில் கரும்புகை கிளம்பி, தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள், தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த 2 பெட்டிகளை தனியாக கழற்றிவிட்டனர். இதற்கிடையில் தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
The post திருப்பதி ரயில் நிலையத்தில் பரபரப்புஎக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது: சாமர்த்தியமாக கழற்றிவிட்ட ஊழியர்கள் appeared first on Dinakaran.