உச்ச நீதிமன்றம் அதிரடி பேச்சு, கருத்து சுதந்திரத்தில் சுய கட்டுப்பாடு அவசியம்: மீறினால் அரசு நடவடிக்கை எடுக்கும்

புதுடெல்லி: இந்து கடவுளுக்கு எதிராக எக்ஸ் சமூக ஊடகத்தில் சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக வஜாஹத் கான் என்பவர் மீது மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வஜாஹத் கான் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு தனது உத்தரவில்,‘‘ மக்கள் அனைவரும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அரசு தலையிடும். பொதுமக்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். மக்களிடையே சகோரத்துவம் வேண்டும். அப்போதுதான் வெறுப்பு பேச்சுகள் அனைத்தும் குறையும் என்று கூறியுள்ளது.

The post உச்ச நீதிமன்றம் அதிரடி பேச்சு, கருத்து சுதந்திரத்தில் சுய கட்டுப்பாடு அவசியம்: மீறினால் அரசு நடவடிக்கை எடுக்கும் appeared first on Dinakaran.

Related Stories: