கெமிக்கல் விற்பனை கடைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை

ஈரோடு : ஈரோட்டில் கெமிக்கல் விற்பனை கடைகளில் மதுவிலக்கு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும், மாற்று முறையில் போதைக்காக பயன்படுத்தப்படுத்தப்படும் மெத்தனால்,எத்தனால் போன்றவற்றின் விற்பனையை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்தொடர்ச்சியாக, ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள கெமிக்கல் விற்பனை கடையில் நேற்று ஈரோடு மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, கெமிக்கல் கடைகளில் இதுவரை விற்பனையான மெத்தனால், எத்தனால், சால்வண்ட் போன்றவை குறித்தும்,அதனை அனுமதிப்பெற்ற நிறுவனங்கள், ஆய்வகங்கள், கல்லூரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என்ற விவரங்களையும், கடைகளில் இருப்பு உள்ள கெமிக்கல் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, மெத்தனால், எத்தனால், சால்வண்ட் போன்றவற்றை தனி நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நிறுவனம், ஆய்வகங்களுக்கு மட்டுமே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும். தனி நபர்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும், விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட கெமிக்கல் கடைகளில் மதுவிலக்கு போலீசாரும், மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை நடத்தி, அந்த அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் அரசு அறிக்கை சமர்பிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post கெமிக்கல் விற்பனை கடைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: