பாஜக ஆதரவுடன் வலம் வரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள்: ஜவாஹிருல்லா

சென்னை: பாஜக ஆதரவுடன் வலம் வரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் திமுக குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேசி வருகிறார். இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பழனிச்சாமியை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக ஆதரவுடன் வலம் வரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என மமக தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்தார். மேலும்,

ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்துக்கு வரவேற்பு: ஜவாஹிருல்லா

ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் பிரச்சாரம் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. திமுக பிரச்சாரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசை பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு செய்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

 

The post பாஜக ஆதரவுடன் வலம் வரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள்: ஜவாஹிருல்லா appeared first on Dinakaran.

Related Stories: