உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

 

தர்மபுரி, ஜூலை 26: நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட இண்டூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து 1000 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை நடந்து வருகிறது. நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட இண்டூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமில் இண்டூர், அக்ரஹாரம், மல்லாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 1000க்கும் மேற்பட்ட மனுக்களை அதிகாரிகள் பெற்றனர்.

நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்குமரன், நீலமேகம், தாசில்தார் பிரசன்னகுமார், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியண்ணன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 16 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: