பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ள புதுமையான மழைநீர் சேமிப்பு திட்டமாக, 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட Eco Blocks மூலம் மழைநீர் சேமிக்கும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது நிலத்தடி நீரை மேம்படுத்தவும், சென்னை மாநகரில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுப்பதற்கும், முக்கியமான நிலைத்த நீர் மேலாண்மை முயற்சியாகும். மழைநீரை சிக்கனமாக சேகரித்து, தரையை ஊடுருவச் செய்வதற்கான வடிவமைப்புடன் இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பூங்கா, நடைபாதை, சாலை மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற பகுதிகளில் மழைநீர் ஊடுருவ முடியாத இடங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மழைநீர் ஊடுருவும் வகையில் ஸ்பான்ச் போன்ற அமைப்பாக மாற்றி, அதன்பின் நிலத்தடி நீர் செறிவூட்டலை துரிதப்படுத்த ஆழ்துறை கிணறு அமைக்கப்பட்டு சீரமைக்கப்படுகிறது. இதன் மூலம் மழைநீர் நிலத்தில் ஊடுருவி நிலத்தடி நீரை மேம்படுத்தி, வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில், மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ப. சுப்பிரமணி, எம். ஸ்ரீதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் பள்ளிக் கட்டடம், சமூக நலக்கூடம் மற்றும் கால்வாய் புனரமைப்பு ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.