பொன்னாங்கண்ணி கீரை – 2 கப்,
சிறு பருப்பு – 4 டீஸ்பூன்,
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்,
துருவிய தேங்காய் – 4 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் – தலா 1 ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ¼ ஸ்பூன்,
அரிசிமாவு – 1 ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
தாளிக்க:
எண்ணெய் – 2 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்.
செய்முறை:
சிறுபருப்பு, கீரை, சாம்பார் பொடி சேர்த்து வேகவைத்து உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுக்கவும். உடன் தேங்காயும் ேசர்த்தரைத்து அரிசி மாவு சேர்த்து ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும். பின் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். கண்களுக்கு மிகவும் சக்தியளிக்கும்.
The post பொன்னாங்கண்ணி கீரை பொரிச்ச குழம்பு appeared first on Dinakaran.