ராசிபுரம், ஜூன் 11: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் பகுதியில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் கடும் வெப்பம் நிலவியது. இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். மாலை திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 6 மணிக்கு மேல் பெய்த மழை பெய்தது. இதனால், பணி முடித்து வீடு திரும்பியவர்கள் மழையில் தொப்பலாக நனைந்து அவதிக்குள்ளாகினர். சிலர் வழியில் உள்ள கட்டிடங்களில் தஞ்சமடைந்தனர். பலத்த மழையால், ராசிபுரம் வாரச்சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
The post 2வது நாள் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.