அறக்கட்டளை துவக்க விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல் நடிகை கவுதமி பங்கேற்பு

 

திருப்பரங்குன்றம், ஜூன் 10: தனியார் அறக்கட்டளை துவக்க விழாவினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் நடிகை கவுதமி, டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரையில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக வீ பேட்டா என்ற அறக்கட்டளையை அதன் நிறுவன இயக்குநர் கார்த்திகேயன் உருவாக்கியுள்ளார். இதன் துவக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் மதுரை சரவணா மருத்துவமனை நிறுவனரும், அதிமுக மாநில மருத்துவரணி இணை செயலாளருமான டாக்டர் சரவணன், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி, சின்னத்திரை நடிகர் மதுரை முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி புதிய அறக்கட்டளையை துவக்கி வைத்தனர். பின்னர் பலருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

The post அறக்கட்டளை துவக்க விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல் நடிகை கவுதமி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: