தேவதானப்பட்டி, ஜூலை 30: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ஜி.எச்.ரோட்டைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(30). இவரது மனைவி பாண்டியம்மாள்(24). இந்நிலையில் சம்பவத்தன்று, வீட்டில் இருந்த பாண்டியம்மாளை, முன்விரோதம் காரணமாக பகவதி நகரைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன்கள் ஹரீஸ், சரவணன், ஆனந்த் மற்றும் சிலர், தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த அவர், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரில் ஹரீஸ், சரவணன் உள்ளிட்டோர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், முத்துக்குமார் தரப்பினர் தாக்கியதாக கூறி ராசம்மாள்(57) என்பவர் அளித்த புகாரில் முத்துக்குமார், அழகர், பாண்டியம்மாள், பொன்னுச்சாமி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பெண் மீது தாக்குதல் போலீசார் வழக்கு appeared first on Dinakaran.
