ஒடிசாவில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட ஐஏஎஸ் அதிகாரி

புவனேஸ்வர்: ஒடிசாவின் கலஹாண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரில் ஐஏஎஸ் அதிகாரி திமான் சக்மா லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் அவரை பிடிப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு தரம்கரில் உள்ள அரசு குடியிருப்பில் இளம் ஐஏஎஸ் அதிகாரி திமான் தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.10லட்சம் லஞ்சமாக பெற்றார்.

அப்போது தொழிலதிபர் முன்னிலையிலேயே ஐஏஎஸ் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து செய்தனர். அவரிடம் இருந்த ரூ.10லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலத்தில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அவரது வீட்டில் இருந்த ரூ.47லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

The post ஒடிசாவில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட ஐஏஎஸ் அதிகாரி appeared first on Dinakaran.

Related Stories: