கள்ளக்காதல் விவகாரம தெரிந்ததும், தாசே கவுடா ஹரிணியின் செல்போனை பறித்து கொண்டு, வீட்டிலேயே அடைத்து வைத்தார்.இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு பிறகு, ஹரிணி, மீண்டும் வெளியே வந்தார், அப்போது, தனது கள்ளக்காதலன் யஷாஸை தொடர்பு கொண்டு பேசினார். கடந்த 6ம் தேதி, இருவரும், சந்தித்தனர். பின்னர், பெங்களூரு பூர்ணா பிரக்யா லேஅவுட்டில் உள்ள ராயல்ஸ் ஓட்டலில் அறை முன்பதிவு செய்த யஷாஸ், அங்கு அவரை அழைத்து சென்றார். அப்போது அவர்கள், உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யஷாஸ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஹரிணியை சரமாரியாக 17 முறை குத்திக் கொன்றார்.
பின்னர், அங்கிருந்து தப்பிவிட்டார். அறையில் தங்கியவர்கள் நீண்ட நேரமாக வெளியே வராததால், ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சுப்பிரமணியபுரா போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, ஹரிணி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார யுஷாசை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஹரிணி தன்னை தவிர்த்து வந்ததால், அவரை கொலை செய்ததாக யஷாஸ் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
The post 17 முறை கத்தியால் குத்தி இளம்பெண் கொடூர கொலை: ரகசிய காதலன் கைது appeared first on Dinakaran.