சென்னை: விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், அக் கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் அருண்ராஜ் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். இவர், கட்சி கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கட்சினர் இவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்.ராஜலட்சுமி, டேவிட் செல்வின், ஸ்ரீதரன், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் அண்மையில் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
The post விஜய் கட்சி கொபசெ ஆனார் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி appeared first on Dinakaran.