சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை வளம் சீர்குலையாத வகையில் கட்டுமான பணிகள்

சென்னை, ஜூன் 6: ஜி ஸ்கொயர் குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறியதாவது: உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சமூக பொறுப்புடன் கூடிய வளர்ச்சியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் என்பது உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாக முன் வைக்கப்பட்டிருப்பது பொருத்தமானது. கட்டுமானத்துறை தொழிலில் ஈடுபட்டிருக்கும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களாக, பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிரான போரில் நாமும் பங்கேற்க வேண்டியது மிக அவசியம். இயற்கை வளத்தை சீர்குலைக்காத கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும். மூங்கிலைப் பயன்படுத்துவதும் இங்கு முறையாக பெறப்பட்ட மரப்பொருட்களை கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவதும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் மிக குறைந்த அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

அத்துடன் இவை நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்டவை இவற்றை வழக்கமான முறையில் பேக்கேஜ் செய்வதை குறைத்து, மறுசுழற்சி செய்யக்கூடிய எளிதில் மட்கும் தன்மையுள்ளவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும். இது சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும். எங்களது ஜி ஸ்கொயர் நிறுவனத்தில், இதுபோன்ற இயற்கை வளத்தைக் குலைக்காத கட்டுமான நடைமுறைகளை எங்களது தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்களில் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறோம். எங்களது பசுமைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, எங்களுடைய கட்டுமானப் திட்டங்களில் ஏற்கனவே 6.36 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோயம்புத்தூரில் உள்ள எங்கள் முதன்மையான திட்டமான செவன் ஹில்ஸ் திட்டத்தில் மேலும் 50,000 மரக்கன்றுகளை நடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை வளம் சீர்குலையாத வகையில் கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: