நாகர்கோவில்: குமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், கடந்த இரு நாட்களுக்கு முன் திண்டுக்கல் செல்வதற்காக நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணித்தார். இவர் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில், வந்தே பாரத் ரயிலில் ஏறி அமர்ந்த நிலையில், ரயில் பெட்டியை சுத்தம் செய்ய வந்தனர். இதனால் தனது பேக்கை, இருக்கையில் வைத்து விட்டு கீழே இறங்கினார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அந்த பேக்கை காணவில்லை. அதில் லேப் டாப், ஐ பேடு உள்ளிட்டவை இருந்தன. புகாரின்பேரில் பேக்கை திருடிய கட்டிட கான்ட்ராக்டர் கிருஷ்ணமணி (47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
The post வந்தே பாரத் ரயிலில் திருட்டு appeared first on Dinakaran.