வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஜெகன்மோகன் நகரை சேர்ந்தவர் காளிராஜ்(26). பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (22), ஒரத்தநாட்டை சேர்ந்தவர் சதீஷ் கண்ணன்(40). 3 பேரும் நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து பிராய்லர் கோழிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் புறப்பட்டனர். லாரியை டிரைவர் சதீஷ் கண்ணன் ஓட்டியுள்ளார். தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் லாரி சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவர் மீது மோதியது. இதில் காளிராஜ், அருண்குமார் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் சதீஷ் கண்ணன் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
The post பாலத்தின் சுவரில் லாரி மோதி 2 பேர் பலி appeared first on Dinakaran.