குரூப் 2, 2 ஏ பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு இன்று தொடக்கம்: 1ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 1936 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 81,305 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் குரூப் 2ஏ பதவியில் பதவிக்கான மெயின் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி நடந்தது. இதில் 20,033 பேர் பங்கேற்றனர். தேர்வர்கள் முதன்மை எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி கடந்த மே 5ம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடக்கிறது. வரும் 1ம் தேதி வரை இந்த இந்த சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாள், நேரத்தில் கலந்து கொள்ள தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

The post குரூப் 2, 2 ஏ பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு இன்று தொடக்கம்: 1ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: