இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; ரூ.2,000 நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு மே 19 2023ல் இருந்து ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஜூன் 2, 2025 நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. ரூ.2,000 நோட்டுகள் சட்டப்படி செல்லும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எழுச்சி இருந்தபோதிலும் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. மொத்த நாணய மதிப்பில் 86 சதவிகிதமும், மொத்த அளவில் 40.9 சதவீதம் பங்களிப்பும் கொண்டு ரூ.500 நோட்டு ஆதிக்கம் செலுத்துகிறது. கள்ளநோட்டை எதிர்த்துப் போராட புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் ரிசர்வ் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
The post 98.26% ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அறிவிப்பு! appeared first on Dinakaran.