ஜிப்மேட் நுழைவுத் தேர்வு முடிவுகள் என்டிஏ தளத்தில் வெளியீடு

சென்னை: ஜிப்மேட் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. புத்தகயா மற்றும் ஜம்மு நகரங்களில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உட்பட ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர ஜிப்மேட் என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

2025-26ம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வு கணினி வழியில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நடத்தப்பட்டது. 12,939 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. https://exams.nta.ac.in/JIPMAT/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது jipmat@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

The post ஜிப்மேட் நுழைவுத் தேர்வு முடிவுகள் என்டிஏ தளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: