பொள்ளாச்சி பாலியல் வழக்கு; குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை: ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அபராதத்துடன் கூடிய சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இனி வருங்காலங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களில் எவரும் ஈடுபடாத வகையிலான ஓர் அச்சத்தை இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏற்படுத்தும், இதேபோன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த முக்கியமான வழக்கில் திறம்பட செயல்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு; குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை: ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு! appeared first on Dinakaran.

Related Stories: