வாஷிங்டன் : ஆட்குறைப்பு நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 6,800 பேரை பணியில் இருந்து நீக்க முடிவு எடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 2,28,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு முன்பு அதிகபட்சமாக 2023ல் 10,000 பேரை பணியில் இருந்து நீக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்.