அங்கு அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியதாவது, நான் பதவி ஏற்ற நாளிலேயே போரை நான் விரும்ப மாட்டேன் என்று கூறினேன். இந்தியா – பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்.
அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை வர்த்தகம் செய்வோம் என்றேன். அவர்கள் இருவரும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள், மிகவும் வலுவான தலைவர்கள், நல்ல தலைவர்கள், புத்திசாலித் தலைவர்கள். எனவே சண்டையை நிறுத்திவிட்டார்கள். சிறியதாகத் தொடங்கிய போர் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை உருவாகி இருந்தது” என்றார்.
இந்தியா – பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு appeared first on Dinakaran.