வன உரிமைகள் சட்டம் குறித்த ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: வனஉரிமை சட்டம் 2006 என்பது, பழங்குடியினரின் வாழ்விட காடுகள் மீதுள்ள உரிமைகளை பாதுகாக்கும் சட்டமாகும். இந்நிலையில் வனஉரிமை சட்டம் பற்றி ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஒன்றிய பழங்குடி விவகார அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “வனஉரிமைகள் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்படும் பிரசாரம் மூலம் பழங்குடி சமூகங்கள் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளிடையே அவர்களின் உரிமைகளை தெரிந்து கொள்ளவும், அதற்கான விழிப்புணர்வை பெறவும் முடியும். இந்த விழிப்புணர்வு இயக்கத்துக்கான நடவடிக்கையை திட்டமிட தொடங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post வன உரிமைகள் சட்டம் குறித்த ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: