மகாராஷ்டிரா-சட்டீஸ்கர் எல்லையில் பயங்கர துப்பாக்கி சண்டை: நக்சல்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்

கட்சிரோலி: சட்டீஸ்கர் எல்லைக்கு அருகே உள்ள மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் கவாண்டேயில் புதிதாக திறக்கப்பட்ட நடை மேம்பாலம் அருகே நக்சல்கள் முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிறப்பு காவல் பிரிவை சேர்ந்த சமார் 200 கமாண்டோக்கள் அடங்கிய குழுவினர் அங்கு விரைந்தனர்.

போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டனர். 3 இடங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கி சண்டை நடந்தது. இதனை தொடர்ந்து நக்சல்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். சம்பவ இடத்தில் இருந்த நக்சல்கள் முகாம் அழிக்கப்பட்டது. அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post மகாராஷ்டிரா-சட்டீஸ்கர் எல்லையில் பயங்கர துப்பாக்கி சண்டை: நக்சல்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: