திருவனந்தபுரம்: பாதுகாப்பு காரணங்களுக்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தின் 3 கிமீ சுற்றளவில் ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு மிகுந்த கவர்னர் மாளிகை, சட்டசபை கட்டிடம், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் வீடுகள், விழிஞ்ஞம் துறைமுகம், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், ரிசர்வ் வங்கி, பத்மநாபசுவாமி கோயில் உள்பட பகுதிகளில் 2 கிமீ சுற்றளவுக்கு ட்ரோன்களை பறக்க விட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக திருவனந்தபுரம் விமானநிலையத்தின் 3 கிமீ சுற்றளவில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவனந்தபுரம் நகர போலீஸ் அறிவித்துள்ளது.
The post திருவனந்தபுரத்தில் விமான நிலையத்தின் 3 கிமீ சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை appeared first on Dinakaran.