அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே திடீரென தரையிரங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. தஞ்சை விமானப்படை தளத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர், பயிற்சிக்காக வந்து சென்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.