அந்தப் பதிவில் அவர் பேசி இருப்பதாவது: முன்னாள் படை வீரர் ஜீவானந்தம் பேசுறேன். செல்லூர் ராஜூ, சோறு தின்னுட்டு பேட்டி கொடுத்தியா? ராணுவத்தை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கு? முன்னாள் மந்திரியா இருந்தா பெரிய ஆளா? தெர்மோகோல் வைத்து வைகை டேமை அடைக்க நீதானே முயற்சி செய்தாய்? ஏன் நீ போயிருக்க வேண்டியதுதானே பார்டர்ல சண்டை போடுறதுக்கு? தெர்மோகோலை வைத்து பார்டர் எல்லைய மூடியிருக்கலாம்ல? நாடென்றால் ராணுவம். ராணுவம் என்றால் நாடு. அது தெரியுமா உனக்கு? ராணுவத்தை புகழ்ந்து பேசுறது, தேசத்தை புகழ்ந்து பேசுறதுக்கு சமம்.
நீதான் தெர்மோகோல் வைத்து வைகை டேமை கவர் பண்ண பார்த்தியே? இப்போ பார்டர் போயி தெர்மோகோலை வைத்து மூடிப்பாரு? என்ன ராணுவத்தை எல்லாம் பத்தி பேசுற. ஆமா மோடிதான் ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்தாரு? நீயா எட்டிப்பார்த்தே? உன் கட்சிக்காரங்களை எல்லாம் இந்த நேரத்துல கூட்டிட்டுப்போயி சண்டை போட வேண்டியதுதானே? உன் தேசப்பற்று தெரிஞ்சுரும்ல. பிரதமர் மோடிக்கும், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்கிற்கும், அமித்ஷாவிற்கும் ஜால்ரா போடணும்னா, நீ நேரா போயி போடு, உன்னை எவன் வேண்டாங்கிறான். இவ்வாறு கடுமையாக பேசியுள்ளார்.
The post ராணுவத்தை பத்திப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கு? பிரதமர், அமைச்சர்களுக்கு ஜால்ரா போடணும்னா நேரா போயி போடு…: செல்லூர் ராஜூவை வறுத்தெடுத்த முன்னாள் ராணுவ வீரர் appeared first on Dinakaran.