ஜனாதிபதி முர்மு 19ம்தேதி சபரிமலையில் தரிசனம்

திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இந்தநிலையில் வைகாசி மாத பூஜை நாட்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஜனாதிபதியின் வருகை குறித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ம் தேதி கேரளா வர உள்ளதாக கேரள அரசுக்கு தற்போது அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.

18ம் தேதி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனாதிபதி கோட்டயம் அருகே உள்ள குமரகத்தில் தங்க திட்டமிட்டு உள்ளார். மறுநாள் 19ம் தேதி ஜனாதிபதி சபரிமலையில் தரிசனம் செய்வார் என்று தெரிகிறது என திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார். இதை முன்னிட்டு வரும் 18, 19 ஆகிய தேதிகளில் சபரிமலையில் சாதாரண பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சபரிமலையில் தரிசனம் செய்யும் முதல் ஜனாதிபதி திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

The post ஜனாதிபதி முர்மு 19ம்தேதி சபரிமலையில் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: