இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத் ராஜா, பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்ததில் பல அதிகாரிகளுக்கு பங்கு உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதி, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது மாநகர போலீஸ் கமிஷனர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை நிலை குறித்த அறிக்கையை ஜூன் 6ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post 2020க்கு பிறகும் பி.எஸ்.4 வாகனங்கள் பதிவு தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்கு: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.