இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று முன்தினம் இரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே ஒரு சாலையும், வாகனமும் பலத்த சேதமடைந்தது. அந்த பகுதியில் இருந்த கரும்புகை எழுந்ததால் விமான பயணிகளும், சாலையில் சென்றவர்களும் பீதியடைந்தனர்.
இந்த தாக்குதலில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விமானம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. ஹவுதி தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “எங்களுக்கு யார் தீங்கு செய்தாலும் அவர்களுக்கு ஏழு மடங்கு அதிகம் தீங்கு ஏற்படுத்துவோம்” என சூளுரைத்துள்ளார்.
The post இஸ்ரேல் விமான நிலையம் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்: டெல்லி – டெல் அவிவ் விமான சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.